மேலும் செய்திகள்
மூச்சுத்திணறி குழந்தை சாவு
20-Jan-2025
4வது மாடியில் இருந்துதவறி விழுந்த மாணவி பலிஓசூர்:ஓசூர் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன், 42. பெங்களூரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார்; இவரது மகள் யாழினி, 16, ஓசூர் அருகே ஏசியன் கிறிஸ்டியன் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 16 மாலை, வீட்டின், 4வது தளத்திலுள்ள மொட்டை மாடிக்கு சென்ற மாணவி யாழினி, படித்து கொண்டிருந்தார். மாடியில் இருந்து கீழே பார்த்த போது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி யாழினி, நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Jan-2025