உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உங்களை தேடி உங்கள் ஊரில் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

உங்களை தேடி உங்கள் ஊரில் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: அஞ்செட்டி தாலுகாவில் உள்ள கிராமங்களில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் வரும், 18 காலை, 9:00 முதல், 19 காலை, 9:00 மணி வரை, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட துறை சார்ந்த அலுவலர்கள் அங்கேயே தங்கியிருந்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். எனவே, அஞ்செட்டி தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள், அஞ்செட்டி மற்றும் உரிகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் வரும், 10ல் நடக்கும் முகாமில் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். குறிப்பாக பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளித்து பயனடையலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ