மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
03-Sep-2024
கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில், 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் வைத்து, நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்கவும், வாங்கவும் கூடாது. மேலும், 10 அடிக்கு மேல் சிலைகள் விற்பவர்கள், வாங்குப-வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரி உட்கோட்டத்தை பொருத்தவரை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, கும்மனுார் மற்றும் எண்-ணேக்கொள்புதுார் தென்பெண்ணை ஆற்றில் சிலைகள் கரைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
03-Sep-2024