உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாங்கனி கண்காட்சியை மேடை மெல்லிசை கலைஞர்கள் புறக்கணிப்பு

மாங்கனி கண்காட்சியை மேடை மெல்லிசை கலைஞர்கள் புறக்கணிப்பு

மாங்கனி கண்காட்சியை மேடை மெல்லிசை கலைஞர்கள் புறக்கணிப்புகிருஷ்ணகிரி, செப். 17-கிருஷ்ணகிரியில், 30வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், இசை நிகழ்ச்சிகளை தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளதை கண்டித்தும், உள்ளூர் இசை கலைஞர்களை புறக்கணிப்பதை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்ட மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பம் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜரத்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரியில் கடந்த, 29 ஆண்டுகளாக நடந்து வரும் அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், உள்ளூர் இசை கலைஞர்களை ஊக்குவிக்க, இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இசை கச்சேரிக்கு துவக்கத்தில், 5,000 ரூபாய் வழங்கிய நிலையில், பின்னர், படிப்படியாக உயர்த்தி, கடந்தாண்டு, 25,000 ரூபாய் வழங்கினர். தற்போது இந்த இசை நிகழ்ச்சிகளுக்கும் டெண்டர் விடப்பட்டு, மிகவும் குறைந்த கட்டணத்தில், கச்சேரியை நடத்த வற்புறுத்துகின்றனர். போக்குவரத்து, வாகன செலவு, இசை கலைஞர்களின் சம்பளம் என, 30,000 ரூபாய் ஆகும் என்றும், 25,000 ரூபாய் கொடுத்தால், கச்சேரியை நடத்துவோம் எனவும் சொன்னோம். ஆனால், டெண்டர் முறையை கொண்டு வந்து, 15,000 ரூபாய் என, குறைந்த கட்டணமாக நிர்ணயித்து, கச்சேரியை நடத்த கட்டாயப் படுத்துகின்றனர். எனவே, மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், இந்த நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக நாங்கள் புறக்கணிக்கின்றோம். மாறாக, மாவட்ட நிர்வாகம், 25,000 ரூபாய் வழங்கினால், இசை கச்சேரியை நடத்துவோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.நிர்வாகிகள், கோபி, தங்கவேல், தர்மபுரி மாவட்ட செயலாளர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ