லாரியில் சிக்கி டிரைவர் பலி
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பூவன்காட்டை சேர்ந்தவர் சங்கர், 33, லாரி டிரைவர். கடந்த, 28ல், கம்மம்பள்ளி கூட்ரோடு அருகே கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் லாரியை நிறுத்திய சங்கர், லாரியின் முன்புற சக்கரத்தில் காற்று போதுமான அளவு உள்ளதா என சோதனை செய்தார். அப்போது லாரி முன்பு-றமாக நகர்ந்து, சங்கர் மீது ஏறியது. லாரி டயரில் சிக்கி காயம-டைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்-ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இறந்தார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.