உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உன்னிகிருஷ்ணன் பிரமாண்ட இன்னிசை நிகழ்ச்சி ஓசூரில் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்

உன்னிகிருஷ்ணன் பிரமாண்ட இன்னிசை நிகழ்ச்சி ஓசூரில் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்

ஓசூர்: ஓசூரில், 'காலைக்கதிர்' நாளிதழ் ஸ்பான்சருடன் நடந்த, பின்-னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்-சியில், 5,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.ஓசூரிலுள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், டி மார்ட் பின்புறமுள்ள ஏ.டி.எஸ்., மைதானத்தில், ஜெயம் ஈவன்ட் சார்பில், பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற, 'என்னவளே, மனசிலாயோ' என்ற பெயரில், பிரமாண்ட இன்-னிசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஊடக உத-வியை, 'காலைக்கதிர்' நாளிதழ் வழங்கியது. ஓசூர், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, ஆர்.டி., டெவலப்பர்ஸ் நிர்வாகிகள் ராதா தயானந்தா, ராதா சந்திரசேகர், வக்கீல் ஆனந்தகுமார், மீரா மருத்துவமனை டாக்டர் அம்பிகா பாரி, எல்.ஐ.சி., முருகக்கு-மரன், சசிகலா சதீஷ்குமார், ரோட்டரி நிர்வாகி காமாட்சி சங்கர் ஆகியோர், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஓசூரில் முதல் முறையாக, உன்னிகிருஷ்ணன் பங்கேற்று, பல்-வேறு பாடங்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.அவருடன் இணைந்து, பிரபல பின்னணி பாடகர்களான மலே-சியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன், உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா, வர்ஷா, அர்ச்சனா, பவ்யா, ரித்விக் ஆகியோர், மவு-னராகம் முரளி தலைமையிலான இசை குழுவினருடன் இணைந்து பாடினர். 5,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள், இசை மழையில் நனைந்தனர். நிகழ்ச்சிக்கு இடையில் பிரமாண்ட திரையில் ரவி முருகையாவின் தேச பக்தி பாடலான, 'தாய் மண்ணே' பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சிப்காட் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஆர்.டி., டெவலப்பர்ஸ், ஷீர்டி டிரஸ்ட், காவேரி, மீரா, லட்சுமி மருத்துவமனைகள், தங்கமயில் ஜூவல்லரி, ஜே.பி., டெவ-லப்பர்ஸ், ஏ., பெரியதம்பி செட்டியார் நிறுவனம், ஓசூர் ரோட்-டரி எலைட், சிவகாமியம்மாள் கல்லுாரி, ஏ.வி.எஸ்., வில்லா, எம்.எஸ்., தோனி மற்றும் குருகுலம் பள்ளி உட்பட பலரது உத-வியால், இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, ஜெயம் ஈவன்ட் மவுனராகம் காமராஜ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை