உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பாலக்கோடு சாலையில்சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.சார் - பதிவாளர் கார்த்திகேயன் பல போலி பத்திர எழுத்தர்களை வைத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அதற்குலஞ்சம் பெற அலுவலர்கள் அல்லாத பலரை புரோக்கர்களாக வைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. அவர் தற்போது விடுப்பில் சென்றுள்ளார். எனினும் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை