109 மாணவருக்கு விலையில்லா மிதிவண்டி
ஓசூர்,ஓசூர், மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடந்தது.ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், 109 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, கவுன்சிலர்கள் மஞ்சுளா முனிராஜ், நாகராஜ், பகுதி செயலாளர் திம்மராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.