உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் ரூ.12 லட்சத்தில்அங்கன்வாடி கட்டடம்

ஓசூரில் ரூ.12 லட்சத்தில்அங்கன்வாடி கட்டடம்

ஓசூரில் ரூ.12 லட்சத்தில்அங்கன்வாடி கட்டடம்ஓசூர்:ஓசூர் மாநகராட்சி, -9வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகரில் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா திறந்து வைத்தார். தொடர்ந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக ஆர்.ஓ., நிலையம் அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி, மண்டல குழு தலைவர் ரவி, கவுன்சிலர் கிருஷ்ணப்பா இளநிலை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !