மேலும் செய்திகள்
ஓசூர், தேன்கனிக்கோட்டையில் 850 சிலைகள் பிரதிஷ்டை
07-Sep-2024
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் நேற்று, 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.ஓசூர், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், ஹிந்து அமைப்-பினர், பொதுமக்கள் சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 850க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்-பட்டன. தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எட்டாம் நாளான நேற்று காலை வாகனங்களில் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தேன்க-னிக்கோட்டை பட்டாளம்மன் ஏரி, தேவராஜன் ஏரி ஆகியவற்றில் கரைக்கப்பட்டன. எஸ்.பி., தங்கதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* ஓசூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 10க்கும் மேற்-பட்ட சிலைகள், நேற்று நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஓசூரில் இன்று ஹிந்து அமைப்பின் சார்பில், 82க்கும் மேற்பட்ட சிலைகள், ராமநாயக்கன் ஏரி, தர்கா சந்திராம்பிகை ஏரியில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக ஹிந்து அமைப்பின் முக்கிய தலைவர்கள் வருகின்றனர். எனவே, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி., உமா ஆகியோர் தலைமையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 1,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
07-Sep-2024