மேலும் செய்திகள்
காய்ச்சல் தடுப்பு ஆய்வு கூட்டம்
30-Aug-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி துவக்க நிகழ்ச்சி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறுகையில், “கிருஷ்ணகிரி ஊரக பகுதிகளை ஒட்டிய நக-ராட்சியின், 15 முதல், 19 வார்டுகளில் டெங்கு நோய் பாதிப்பு இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, அப்பகுதிகளில் விழிப்பு-ணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு விழிப்புணர்வு பணி துவங்-கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, கொசுமருந்து அடிக்கும் பணியில், 50க்கும் மேற்-பட்ட நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகு-திகளில் உள்ள வீடுகள்தோறும் சென்று, பிரிட்ஜ் பின்புறம் தண்ணீர் தேங்கியுள்ளதா எனவும் பார்த்து வருகின்றனர். அவர்க-ளுடன் டெங்கு ஒழிப்பு குழுவினரும் செல்கின்றனர். அனைவ-ருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் கிருஷ்ணகிரி நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் இப்பணி தொடரும். அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், இப்பணி-களை முறையாக மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், இளநிலை பொறியா-ளர்கள் உலகநாதன், அறிவழகன் களப்பணி உதவியாளர் செல்வம், துப்புரவு ஆய்வாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், அலு-வலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
30-Aug-2024