பவளவிழாவில் வீடுகள் தோறும் தி.மு.க., கொடி பறக்க வேண்டும்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: 75 ஆண்டுகளாக மக்களுக்கு பணியாற்றிய, தி.மு.க., இந்தாண்டு தன் பவள விழா நிறைவை கொண்டாடுகிறது. இதையொட்டி தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் ஆணைப்-படி, கட்சி கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் உள்ள, தி.மு.க.,வினரால் அல்லும், பகலும் உழைத்த மூத்த நிர்வாகிகள் கைகளால் கொடியேற்றி கொண்டாட வேண்டும். வீதிகள்தோறும் பறக்கும், தி.மு.க., கொடி நம் வீடுகள்தோறும் பறக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.