உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆசிரியரிடம் ரூ-.6.30 லட்சம் மோசடி

ஆசிரியரிடம் ரூ-.6.30 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சக்தி நகரை சேர்ந்தவர் சபரிநாதன், 32; தனியார் பள்ளி ஆசிரியர். இவரது, 'வாட்ஸாப்'பில், 'குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளன. அதை வாங்கி விற்றால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' என, ஒரு தகவல் வந்தது. அந்த பக்கத்தில் இணைந்து, தன் விபரங்களை பதிவிட்டார். அவரிடம் ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை காண்பித்து, குறைந்த விலையை கூறியுள்ளனர். நம்பிய சபரிநாதன், 6.30 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். எந்த பொருளும் வரவில்லை. அவரை தொடர்பு கொண்ட எண்கள், சம்பந்தப்பட்ட இணையதள பக்கங்கள் முடங்கின. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரிநாதன், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !