உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் தந்தைக்கு திதி கொடுக்க வந்தவர் சாவு

ஒகேனக்கல்லில் தந்தைக்கு திதி கொடுக்க வந்தவர் சாவு

பென்னாகரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் நாராயணசாமி, 67. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தன் தந்தைக்கு திதி கொடுக்க நேற்று மதியம் ஒகேனக்கல் வந்தார். ஒகேனக்கல்லில் மாமரத்துக்கடவு காவிரியாற்றில் திதி கொடுக்க முயன்றபோது மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்-டர்கள் நாராயணசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஒகே-னக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை