மேலும் செய்திகள்
1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
03-Sep-2024
ஜல்லி கடத்திய லாரி பறிமுதல் காரிமங்கலம், செப். 8- விழுப்புரம் மண்டல சுரங்கத்துறை உதவி புவியியலாளர் மதன்ராஜ் மற்றும் விழுப்புரம் மண்டல இணை இயக்குனரக உதவி புவியியலாளர் மஞ்சுநாத், தர்மபுரி துணை இயக்குனராக உதவி புவியியலாளர் புவனமாணிக்கம், தர்மபுரி தனி ஆர்.ஐ., அருணகிரி ஆகியோர் கடந்த, 5 அன்று காரிமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த, மினி டிப்பர் லாரியை நிறுத்த முயன்ற போது, டிரைவர் தப்பி ஓடினார். லாரியை சோதனை செய்தபோது, அதில், 2.5 யூனிட் ஜல்லி கற்கள் கடத்தியது தெரிந்தது. டிப்பர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தப்பியோடியவர் மீது, நடவடிக்கை கோரி, காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
03-Sep-2024