உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நின்றிருந்த லாரி மீது பைக் மோதி இருவர் பலி

நின்றிருந்த லாரி மீது பைக் மோதி இருவர் பலி

திருப்பத்துார் : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 54. இவரது தம்பி ரமேஷ், 50. இருவரும், பிளம்பர் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் பணிக்காக திருப்பத்துார் சென்று விட்டு அன்றிரவு, 10:00 மணிக்கு, 'பஜாஜ்' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை ராஜேஷ் ஓட்டினார்.அப்போது, திருப்பத்துார் மாவட்டம், ராஜமங்கலத்தை சேர்ந்த குமார் என்பவர், லாரியில் ஜல்லி லோடுடன் கிருஷ்ணகிரி சென்று கொண்டிருந்தார். கள்ளேரி பகுதியில் டீசல் காலியானதால், லாரி சாலையிலேயே நின்றது.அதை அறியாமல், அவ்வழியாக ராஜேஷ் ஓட்டி வந்த பைக், லாரி மீது மோதியதில், பைக்கில் வந்த ராஜேஷ், ரமேஷ் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாயினர். கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை