உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இ.கம்யூ., நடைபயண பிரசாரம் இயக்கம்

இ.கம்யூ., நடைபயண பிரசாரம் இயக்கம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட் டம், பர்கூரில், இ.கம்யூ., கட்சி சார்பில், நேற்று மதியம் நடைபயண பிரசார இயக்கம் நடந்தது. வட்ட செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணு, வட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பவுன்ராஜ் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.நடை பயணத்தில், தமிழக அரசு டில்லி பிரதிநிதியை மாற்ற வேண்டும். எண்ணேகொள் அணையிலிருந்து பெரிய ஏரிக்கு வெட்டும் கால்வாய் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். அரசு பணியில் இல்லாத ஏழை குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்க வேண்டும். பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயித்து, சட்டபூர்வமாக்க வேண்டும். தொழிலாளர் உரிமையை பறிக்கக்கூடாது. தலித், பழங்குடியினர் மீது வன்கொடுமை முறைகளை நீக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நீண்ட நாட்களாக குடியிருந்து வருபவர்களுக்கு, பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ