10ம் வகுப்பு தேர்வை எழுதும் 24,859 மாணவ, மாணவியர்
10ம் வகுப்பு தேர்வை எழுதும் 24,859 மாணவ, மாணவியர்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தொடங்கும், 10ம் வகுப்பு தேர்வை, 24,859 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று, 10ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 13,942 மாணவ, மாணவியர் ஓசூர் கல்வி மாவட்டத்தில், 10,917 மாணவ, மாணவியர் என மொத்தம், 24,859 பேர் தேர்வு எழுதுகின்றனர். 115 தேர்வு மையங்களில் நடக்கும் தேர்வுகளை கண்காணிக்க, 130 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும், தயார் நிலையில் இருப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.