உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிராமத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

கிராமத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த சிந்தகும்ம-னப்பள்ளி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, நாகராஜ் என்ப-வரின் வீட்டின் அருகே சாலையில், 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பாம்பை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் குடியிருப்பு பகு-தியில் புதருக்குள் புகுந்த மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் மலைப்பாம்பை பாதுகாப்பாக, வனப்பகு-தியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்