உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 10ம் ஆண்டு கம்பன் விழா

10ம் ஆண்டு கம்பன் விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கம்பன் கழகம் சார்பில், 10ம் ஆண்டு கம்பன் விழா நேற்று நடந்தது. செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். நிறுவன தலைவர் ரவீந்தர் தலைமை வகித்தார். ஏலகிரி பாரதி தமிழ்சங்க தலைவர் சிவராஜி, அதியமான் கல்வி நிறுவனர் திருமால்முருகன், தமிழ்த்துறை தலைவர் பழனிவேலு, வாணியம்பாடி உமாசங்கர் ஆகியோர் பேசினர்.விழாவில், கருமலை வள்ளலார், கல்வியாளர், மருத்துவ செம்மல், சொல்லின் செல்வர், சேவை செம்மல், கருமலை செம்மல், சேவை மங்கை என, அந்தந்த துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 250 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி நடத்தி அதில் முதலிடம் பிடிக்கும், 100 பேருக்கு, காங்., கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பவாணன், டாக்டர் இஸ்மாயில் மாலிக், ஆரியபவன் ஓட்டல் நிறுவனர் நாகராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாணவ, மாணவியரின் பரத நாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், செயலாளர் அருள், பொருளாளர் ஸ்ரீரங்கன், ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் உள்பட, 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை