உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் பலி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கஞ்சனுாரை சேர்ந்-தவர் பரமசிவம், 38. கூலித் தொழிலாளி. இவர், 11 ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம் போல் வீட்டின் அருகே உள்ள ஆட்டுப்பட்டியில், இரவில் ஆடுகளை அடைத்து விட்டு சென்-றுள்ளார். நேற்று அதிகாலையில் பார்த்தபோது ஆடுகள் அனைத்தும் கழுத்து, வயிற்று பகுதியில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தன. நேற்று முன்தினம் அதிகாலை, அதே பகுதியில் சின்னக்கண்ணு என்கிற விவசாயி வீட்டின் அருகில் ஆட்டுகொட்டாயில் இருந்த, 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியதில், அனைத்து ஆடு-களும் இறந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் முனியப்பன், வனவர் முரு-கேசன், வன காப்பாளர் மணிகண்டன், கல்லாவி கால்நடை மருத்-துவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !