உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 7வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 125 மனுக்கள்

7வது நாள் ஜமாபந்தியில் பெறப்பட்ட 125 மனுக்கள்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 16ல் ஜமாபந்தி துவங்கி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று, 7வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில், காவேரிப்பட்டணம் உள்வட்டத்திற்கு உட்பட்ட பன்னிஹள்ளி, எர்ரஹள்ளி, கரடிஹள்ளி, சாப்பர்த்தி, ஜெகதாப், மிட்டஹள்ளி, குண்டலப்பட்டி, காவேரிப்பட்டணம் பகுதிகளை சேர்ந்த, 11 கிராம மக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், புதிய ரேஷன் அட்டை, கிராம கணக்கில் மாற்றம் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 125 மனுக்களை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினர். தொடர்ந்து, 11 கிராமங்களை சேர்ந்த கிராம கணக்கு, 'அ'- பதிவேடு, எப்.எம்.பி. பதிவேடு, அடங்கல், பண வரவு பதிவேடு உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.மாவட்ட கலெக்டரின் அலுவலக மேலாளர் குருநாதன், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, தனி தாசில்தார்கள் இளங்கோ, மகேஸ்வரி, வடிவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை