உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்திய அரசை கண்டித்து 13 தொழிற்சங்கத்தினர் மறியல்

மத்திய அரசை கண்டித்து 13 தொழிற்சங்கத்தினர் மறியல்

கிருஷ்ணகிரி, மத்திய அரசை கண்டித்து, 13 தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடந்தது தொழிலாளர்களுக்கு விரோதமான, 4 சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தப்பட்ட ஊதியம், 26,000 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச பென்சன், 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூர் காந்தி சிலை அருகே, எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., அங்கன்வாடி ஊழியர்கள், ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., உட்பட பல்வேறு தொழிற்சங்கள் சார்பில், நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. இதில், 400 பெண்கள் உட்பட, 850 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். அதேபோல், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி, ஊத்தங்கரையில் மறியல் போராட்டம் நடந்தது.* கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அண்ணாதுரை சிலை எதிரில், ஜாக்டோ ஜியோ சார்பிலும், கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி முன்பு, இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பிலும், கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.பி.ஐ., (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில், மறியல் போராட்டம் நடந்தது.* தர்மபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். ஜாக்டோ ஜியோ சார்பில், அகில இந்திய வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுருளிநாதன், சாமிநாதன், பெஞ்சமின், ராசா ஆனந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். அதேபோல், அரூர் கச்சேரிமேடு, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி