நீட் தேர்வு 1,320 பேர் எழுதுகின்றனர்
நீட் தேர்வு 1,320 பேர் எழுதுகின்றனர்கிருஷ்ணகிரி:நீட் தேர்வையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து, கலெக்டர் தினேஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் மே, 4ல், நீட்தேர்வு, 3 மையங்களில் நடக்கிறது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 240 பேர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 600 பேர் மற்றும் குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில், 480 பேர் என மொத்தம், 1,320 மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில், தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு மைய அறைகளில் மின் வசதி, போதிய காற்றோட்ட வசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சர்தார், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, தலைமையாசிரியர்கள் மகேந்திரன், வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர்.