மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
11-Apr-2025
15 சேவல் விஷம் வைத்து சாகடிப்புகிருஷ்ணகிரி:கல்லாவி அடுத்த சந்துாரை சேர்ந்தவர் திம்மராயன், 67. அதே பகுதியை சேர்ந்தவர் தர்மன், 65. உறவினர்களான இவர்களுக்குள் சொத்து பிரச்னை இருந்தது. இந்நிலையில் கடந்த, 7ல், திம்மராயன் வளர்த்து வந்த, 15 சேவல்கள் செத்து கிடந்தன. இது குறித்து, திம்மராயன் கல்லாவி போலீசில் புகார் செய்தார்.அதில் முன்விரோதம் காரணமாக தர்மன், 65, அவரது மகன்கள் சண்முகம், 39, வெங்கடேசன், 43, மனைவி மாரம்மாள், 55, மருமகள் தேவி, 39, உள்ளிட்டோர் சேவல்களுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்ததாக தெரிவித்தனர். அதன்படி வழக்குப்பதிந்த கல்லாவி போலீசார், குற்றம்சாட்டப்பட்ட, ஐந்து பேரிடம் விசாரிக்கின்றனர்.
11-Apr-2025