சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.85 லட்சம் பறிமுதல்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை, சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்து, கணக்கில் வராத, 1.85 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவல-கத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பிரபு, சேலம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத, ஒரு லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நேற்று மாலை, 5:00 மணிக்கு அலுவலகத்தில் நுழைவதற்கு ஐந்து நிமிடத்துக்கு முன்னதாக, சார்பதிவாளர் மோனிகா உடல்நிலை சரியில்லை என்று கூறி, ஊத்தங்கரை தனியார் மருத்துவமனைக்கு சென்றது குறிப்பிடத்தக்-கது. நேற்று இரவு, 10:00 மணியை கடந்தும் போலீசாரின் சோதனை தொடர்ந்தது.