மேலும் செய்திகள்
தனியார் பள்ளி பஸ் மோதி பிளஸ் 1 மாணவர் பலி
09-Oct-2025
சூளகிரி: கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே பேகூரை சேர்ந்தவர் முகம்மது மிலன், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அந்திவாடியிலுள்ள சர்ச்சில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, பூனப்பள்ளி - ஆனைக்கல் சாலையில் நடந்து சென்றார். அப்போது அதிவேகமாக வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர். சூளகிரி அருகே மடத்துாரை சேர்ந்தவர் சிம்பு, 21. கடந்த, 19ம் தேதி இரவு, 7:45 மணிக்கு, சூளகிரி - கட்டிகானப்பள்ளி சாலையிலுள்ள தேவர்குட்டை முனீஸ்வரர் கோவில் அருகே, டியோ ஸ்கூட்டரில் சென்றார். அவ்வழியாக வந்த, 'பஜாஜ் பல்சர்' பைக் மோதி படுகாயமடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Oct-2025