மேலும் செய்திகள்
மண் கடத்திய லாரி பறிமுதல்
10-Apr-2025
ஓசூர்:ஓசூர், மத்திகிரி கால்நடை பண்ணை அருகே, தேன்கனிக்கோட்டை சாலையில், வருவாய் ஆய்வாளர் தருமன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, இரு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, 8 யூனிட் ஜல்லி கற்களை, கர்நாடகாவிற்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
10-Apr-2025