மேலும் செய்திகள்
கல் கடத்தல்; வேன் பறிமுதல்
24-Apr-2025
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் துறை உதவி அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மத்திகிரி அடுத்த கர்னுார் ஏரி அருகே ரோந்து சென்றனர்.அங்கு நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 5 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. சரவணன் புகார்படி, மத்திகிரி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.தேன்கனிக்கோட்டை வி.ஏ.ஓ., வரதராஜ் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டையில் நகரில் ரோந்து சென்றனர்.அப்போது அங்கு நின்ற லாரியில், இரண்டு யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. வரதராஜ் புகார் படி தேன்கனிக்கோட்டை போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
24-Apr-2025