மேலும் செய்திகள்
நள்ளிரவில் பைக் திருடிய2 தொழிலாளிகள் கைது
20-Apr-2025
காய்கறி லோடு லாரி கவிழ்ந்து விபத்து
24-Apr-2025
பாகலுார்:பாகலுார் அருகே, பெலத்துார் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் சிவா, 43. பாகலுார் அருகே பாலிகானப்பள்ளியை சேர்ந்தவர் மோகன், 30. இருவரும் தச்சு தொழில் செய்து வந்தனர்; கடந்த, 27ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, பாகலுார் - மாலுார் சாலையில் உள்ள எச்.பி., பெட்ரோல் பங்க் அருகே, சாலையோரம் தங்களது மொபட்டுகளை நிறுத்தி விட்டு பேசி கொண்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கீழநாதம் நடுத்தெருவை சேர்ந்த சந்தானராஜ், 51, என்பவர் அலட்சியமாகவும், அதிவேகமாகவும் ஓட்டி சென்ற ஈச்சர் லாரி, சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்த சிவா, மோகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தனர். பாகலுார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் விசாரிக்கிறார்.
20-Apr-2025
24-Apr-2025