செப்டிக் டேங்கில் விழுந்து 2 வயது குழந்தை பலி
போச்சம்பள்ளி: செப்டிக் டேங்கில் விழுந்த, ௨ வயது குழந்தை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், இருளர் காலனியை சேர்ந்தவர் மதுரைவீரன், 27. இவரின் மனைவி பரமேஸ்வரி, 22. இவர்களின் இரண்டு வயது குழந்தை வசந்த். நேற்று முன்தினம் காலையில், மதுரைவீரனும், பரமேஸ்வரியும் கூலிவேலைக்கு சென்றனர். குழந்தை வசந்த்தை வீட்டிலிருந்த மதுரை வீரனின் தாய் லட்சுமி கவனித்து கொண்டார். இந்நிலையில் மாலை, 6:00 மணியளவில் வசந்த் வெளியே விளையாடி கொண்டிருந்தான். அருகே ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் முன், மூடாத நிலையில் செப்டிக் டேங்க இருந்து. அதில், வசந்த் தவறி விழுந்ததில் உயிரிழந்தான். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.