உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதல்வர் வருகையையொட்டி 2,000 போலீசார் பாதுகாப்பு பணி

முதல்வர் வருகையையொட்டி 2,000 போலீசார் பாதுகாப்பு பணி

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 நாள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். அதற்காக வரும், 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு, பேலகொண்டப்பள்ளியிலுள்ள 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' (தால்) நிறுவனத்திற்கு காலை, 11:00 மணிக்கு தனி விமானத்தில் வருகிறார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மறுநாள், 12ம் தேதி கிருஷ்ணகிரியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று விட்டு, மீண்டும் ஓசூர் வந்து, தனி விமானத்தில் சென்னை செல்கிறார். முதல்வர் வந்து செல்லும் சாலைகள், பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், போலீசார் தற்போது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், முதல்வர் வருகையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.தனி விமானத்தில் இறங்கி, அதன் பின் சாலை மார்க்கமாக அவர் பயணிக்க உள்ளதால், ஆங்காங்கு போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதற்காக, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் தலைமையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட, 8 மாவட்டங்களிலிருந்து, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை