21 நாட்கள் கோடைக்கால பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான, 21 நாட்கள் இருப்பிடமில்லா கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த, 25 முதல் துவங்கி, வரும் மே, 15 வரை, 21 நாட்கள் நடக்கிறது. இதில், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மாணவர் அல்லாதோர் காலை, மாலை தலா இரண்டரை மணி நேரம் பயிற்சி பெற்று வருகின்றனர். முகாமில், தடகளத்தில், 44 மாணவ, மாணவியர், கைப்பந்து, 68, ஜூடோ, 68, பாக்சிங், 70, தேக்வாண்டோ, 59 என, 213 ஆண்களும், 96 பெண்களும் என மொத்தம், 309 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் கூறுகையில், ''கோடைக்கால பயிற்சியில், அந்தந்த துறையை சேர்ந்த சிறந்த பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்,'' என்றார்.