மேலும் செய்திகள்
2 பெண் உட்பட 3 பேர் மாயம்
15-Feb-2026
உத்தனப்பள்ளி:டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்த, அண்ணன், தம்பி உட்பட, 3 பேரை போலீசார் கைது செய்துள்-ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் அருகே, 'ஜாஸ்மின்' என்ற பெயரில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறு-வன பிளான்ட் இயங்குகிறது. இதற்குள் கடந்த, 6ம் தேதி நள்ளி-ரவு, முகமூடி அணிந்த, 8 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலாளிகளான ராயக்-கோட்டை அருகே உள்ளுகுறுக்கையை சேர்ந்த சரவணன், 36, மற்றும் துார்வாசனுாரை சேர்ந்த கிருஷ்ணன், 50, ஆகியோரை தாக்கி கட்டி போட்ட கும்பல், அங்கு அறையிலிருந்த, 5.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'ஏசி' தொடர்பான பொருட்கள் மற்றும் காவலாளியின் ஒரு துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளை-யடித்து தப்பியது.உத்தனப்பள்ளி போலீசார், அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி, ஓசூரில் பழைய பொருட்கள் கடை நடத்தி வரும், தர்மபுரி மாவட்டம், எர்ரப்பனஹள்ளி அருகே ஈச்சம்பள்ளியை சேர்ந்த தங்கவேல், 28, அவரது தம்பி மாணிக்கம், 27, மற்றும் பெங்களூருவில் பழைய பொருட்கள் கடை நடத்தும், தர்மபுரி நல்லம்பள்ளி அருகே எச்ச-னஹள்ளியை சேர்ந்த முனிராஜ், 38, ஆகிய, 3 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், கொள்ளை பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், 5.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து மேலும், 5 பேரை தேடி வருகின்றனர்.
15-Feb-2026