மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்
07-Mar-2025
ஓசூர்: ஓசூரை சேர்ந்தவர், 18 வயது சிறுவன்; தனியார் ஸ்டூடியோவில் வேலை செய்கிறார். கடந்த, 14 மதியம், 1:30 மணிக்கு, ஓசூர் சந்-திரசூடேஸ்வரர் கோவில் திருவிழா தேரோட்டத்தை பார்க்க சென்றவர் மாயமானார். அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் தேடி வருகின்றனர்.ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோவை சேர்ந்தவர் தனசேகரா மனைவி சோனியா, 27. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது கணவர் ஹட்கோ போலீசில் கொடுத்த புகாரில், பெங்களூருவை சேர்ந்த உமாகாந்த், 25, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடுகின்றனர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தா, 20. ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்; கடந்த, 12 மதியம், 3:30 மணிக்கு, வீட்டிலி-ருந்து மாயமானார்.
07-Mar-2025