உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவி உட்பட 3 பேர் மாயம்

மாணவி உட்பட 3 பேர் மாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, நியூபேட்டை சேலம் சாலையை சேர்ந்தவர் நடராஜன் மனைவி திவ்யபாரதி, 33. கடந்த, 2ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.ஓசூர், பேரண்டப்பள்ளி அருகே கொத்துாரை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்; கடந்த, 6ம் தேதி இரவு, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய் புகார்படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.சிங்காரப்பேட்டை அருகே ரெட்டியூர் கணபதி நகரை சேர்ந்தவர் வேலு மகள் சுகாஷினி, 19. காரப்பட்டு தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 7ம் தேதி வீட்டிலிருந்து சென்ற சுகாஷினி மாயமானார். அவரது தந்தை புகாரில், வேலுரெட்டியூரை சேர்ந்த தீனா மீது, சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை