/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பம்பை வாசித்த படி 30 கி.மீ., துாரம் மாங்கனி கண்காட்சிக்கு நடைபயணம்
பம்பை வாசித்த படி 30 கி.மீ., துாரம் மாங்கனி கண்காட்சிக்கு நடைபயணம்
பம்பை வாசித்த படி 30 கி.மீ., துாரம்மாங்கனி கண்காட்சிக்கு நடைபயணம்போச்சம்பள்ளி, செப். 29-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மகாதேவகொல்லஹள்ளியை சேர்ந்தவர் அசோக்குமார், 37. கிராமிய பம்பை இசை கலையில் ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது ஏதாவது சாதனையை நிகழ்த்த கருதி, கடந்த, 2022ல் தன் கிராமத்திலுள்ள சமுதாய கூடத்தில் தொடர்ந்து, 6 மணி நேரத்திற்கு இடைவிடாமல் பம்பை வாசித்து சாதித்தார். இந்நிலையில் தற்போது, கிருஷ்ணகிரியில் நடக்கும், 30வது மாங்கனி கண்காட்சியை பெருமைப்படுத்தும் வகையில், நேற்று காலை, 8:00 மணிக்கு போச்சம்பள்ளியிலிருந்து சந்துார், தொகரப்பள்ளி, ஜெகதேவி வழியாக மாங்கனி கண்காட்சி நடக்கும் அரசு கல்லுாரி வரை தொடர்ந்து நிற்காமல் பம்பை வாசித்து படி நடந்து சென்றார். இதை வழிநெடுங்கிலும் கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் பார்த்து பாராட்டினர்.