மக்கள் குறைதீர் கூட்டத்தில் 358 கோரிக்கை மனுக்கள்
கிருஷ்ணகிரி, க்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 358 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றில் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.