உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் 4 பேர் பலியான விபத்து; 4 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு

ஓசூரில் 4 பேர் பலியான விபத்து; 4 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு

ஓசூர்; ஓசூர் அருகே விபத்தில் நான்கு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியான வழக்கில், மேலும் நான்கு வாகன டிரைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் லாரி மோதி பலியாகினர். இந்த நால்வர் இறப்புக்கு காரணமான லாரி டிரைவர், கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவை சேர்ந்த லாரி டிரைவர் கிரிஷா, 33, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும், விபத்துக்கு காரணமான, கிருஷ்ணகிரி அருகே சின்னபனமுட்லுவை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் லட்சுமணன், 26, நெல்லுாரை சேர்ந்த லாரி டிரைவர் அக்பர் அலி லஸ்கர், 33, மேற்கு வங்கத்தை சேர்ந்த டாடா ஹாரியார் கார் டிரைவர் அப்ஜத் தெப்ராய், 35, ஆந்திராவை சேர்ந்த பிக்கப் வாகன டிரைவர் பிரவீன்குமார், 25, ஆகிய, நான்கு பேர் மீதும் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை