உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 4 மாத பெண் குழந்தை சாவு

4 மாத பெண் குழந்தை சாவு

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த மஞ்சகுட்டையை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மனைவி திலகவதி, 20. இவர்களின் 4 மாத பெண் குழந்தை பிரதிக்க்ஷா. கடந்த, 1ம் தேதி இரவு குழந்தை தாய்ப்பால் குடித்து விட்டு துாங்கியது. சிறிது நேரம் குழந்தை அசைவின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி