உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் வெவ்வேறு இடங்களில் சாலை விபத்தில் 4 பேர் பலி

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் சாலை விபத்தில் 4 பேர் பலி

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பர்வத ஆஞ்சநேயா கோவில் அருகே வசிப்பவர் ஜெயந்த், 21, கார் டிரைவர். இவரும், புளுபெல்பள்ளி ஜி.கே., லேஅவுட்டை சேர்ந்த அபி, 21 மற்றும் தேவராஹள்ளி நந்தா, 22, ஆகியோரும் நண்பர்கள். மூவரும் பஜாஜ் பல்சர் பைக்கில், பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு சென்றனர். ஜெயந்த் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டிச் சென்றார். ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பாரத் பெட்ரோல் பங்க் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி முன்னால் சென்ற அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில், ஜெயந்த், அபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த நந்தா, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் மாதப்பா, 37. கூலித்தொழிலாளி; நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, ஹோண்டா டியோ மொபட்டில் ஹெல்மெட் அணியாமல், ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் சென்றார். காரப்பள்ளி அருகே, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியதில் படுகாயமடைந்த மாதப்பா பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.ஓசூர் அருகே பழைய மத்திகிரியை சேர்ந்தவர் சந்திரசேகர், 52, பெயின்டர்; இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, இ.எஸ்.ஐ., இன்னர் ரிங்ரோட்டில் டி.வி.எஸ்., விக்டர் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். மத்தம் பஸ் ஸ்டாப் அருகே, நாய் குறுக்கே வந்ததால், அதன் மீது மோதி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி