உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 மாணவி உட்பட 4 பேர் மாயம்

2 மாணவி உட்பட 4 பேர் மாயம்

கிருஷ்ணகிரி:ஓசூர், நீலமலை நகரை சேர்ந்தவர் திரேகா, 19. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரின் பெற்றோர், ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதில், ஓசூர், முல்லை நகரை சேர்ந்த பாலு, 23, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.ஓசூரை சேர்ந்த, 16 வயதான, 10ம் வகுப்பு மாணவி, கடந்த, 15ல், பள்ளி தேர்வு முடிந்த நிலையில் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், ஓசூர், பாரதி நகரை சேர்ந்த அருண்குமார், 24, என்ற கூலித்தொழிலாளி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர். சூளகிரி அடுத்த பீர்பள்ளியை சேர்ந்தவர் தமிழரசி, 19. தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.சி.ஏ., படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் சூளகிரி போலீசில் புகார் அளித்தனர். அதில், சூளகிரி அடுத்த முருக்கானப்பள்ளியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல மகாராஜகடையை அடுத்த பெரிய சக்னாவூரை சேர்ந்தவர் ராமசாமி, 64, விவசாயி. கடந்த, 14ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது குடும்பத்தினர் அளித்த புகார் படி, மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை