மேலும் செய்திகள்
சிறுமி உட்பட இருவர் மாயம்
31-Mar-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கீழ் கரடிகுறி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் மனைவி கீதா, 31. கடந்த, 17 காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. அவரது கணவர் கொடுத்த புகார்படி, மகாராஜகடை போலீசார் தேடி வருகின்றனர்.பர்கூர் தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது மாணவி. அரசு கல்லுாரியில், பி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 24 காலை, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தாய் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், குருபரப்பள்ளி அருகே ஆவல்நத்தத்தை சேர்ந்த இளையராஜா, 24, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.நாகரசம்பட்டி அருகே, சுண்டகப்பட்டியை சேர்ந்தவர் பாபு, 46. தேங்காய் வியாபாரி; கடந்த, 21 இரவு, 7:30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. அவரது மனைவி முருகம்மாள், 46, புகார் படி, நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். கல்லாவி அருகே, துளசம்பட்டியை சேர்ந்தவர் இளவரசன் மனைவி ரஞ்சனி, 25. கடந்த, 25 இரவு, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது கணவர் புகார் படி, கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Mar-2025