உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சமையலர் உட்பட 4 பேர் மாயம்

சமையலர் உட்பட 4 பேர் மாயம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே சம்மந்தகோட்டையை சேர்ந்தவர் லட்சுமய்யா மகள் ராணி, 21. கடந்த, 13 மாலை, 6:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் சோமசேகர், 42, கொடுத்த புகாரில், கவுதாளத்தை சேர்ந்த சிவா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தேன்-கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.*தேன்கனிக்கோட்டை அருகே மல்லஹள்ளியை சேர்ந்தவர் கரி-யப்பா, 26. ஓட்டலில் சமையலராக உள்ளார்; இவரது மனைவி ஜெயலட்சுமி, 23, பிரசவத்திற்காக கடந்த, 3 மாதங்களுக்கு முன் தாய் வீடான லக்கசந்திரத்திற்கு சென்றார். கடந்த மாதம், 19 மதியம், 3:00 மணிக்கு லக்கசந்திரம் சென்று திரும்பிய கரியப்பா, தன் வீட்டிற்கு செல்லாமல் மாயமானார். மனைவி ஜெயலட்சுமி புகார் படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.* ஊத்தங்கரை அடுத்த வெண்ணம்பட்டியை சேர்ந்தவர் பவித்ரா, 25. கடந்த, 11ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாய-மானார். அவரது கணவர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.*வேப்பனஹள்ளி அடுத்த இனாம்குட்டப்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார், 35, கூலித்தொழிலாளி. கடந்த, 13 இரவு, வீட்டிலி-ருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது மனைவி புகார் படி வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை