உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 40 ஆண்டுகளுக்கு பின்மாரியம்மன்சித்திரைத் திருவிழா

40 ஆண்டுகளுக்கு பின்மாரியம்மன்சித்திரைத் திருவிழா

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்பள்ளி, சூரன்குட்டை எம்.டி.வி.,நகர் ஆகிய கிராம மக்கள் இணைந்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் மாரியம்மன் திருவிழா மற்றும் சித்திரை திருவிழாவை நேற்று முன்தினம் கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக, அக்னி நட்சத்திரத்தின் வெப்பத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில், உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடந்தது.இதில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், கக்குமாரியம்மன், காளியம்மன், கங்கையம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா சென்றனர். சூரன்குட்டை ஸ்வர்ணகர்ஷன பைரவர் கோவிலில் இருந்து துவங்கிய வீதி உலா, எம்.டி.வி., நகர், ஏரிக்கரை வழியாக வெண்ணம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக கோவிலுக்கு சென்றன. இதில் பக்தர்கள், பரமசிவன், பார்வதி, காளி, மாரியம்மன், வெக்காளியம்மன், அங்காளம்மன், முனியப்பன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை