உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முனியப்பன் கோவிலில் 40ம் ஆண்டு திருவிழா

முனியப்பன் கோவிலில் 40ம் ஆண்டு திருவிழா

முனியப்பன் கோவிலில்40ம் ஆண்டு திருவிழாதர்மபுரி, தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை அடுத்த ஏ.எஸ்.டி.சி., நகரில் உள்ளது, சக்தி முனியப்பன் கோவில். 40 ஆண்டு காலம் இந்த கோவில் இங்கு உள்ள நிலையில், பக்தர்கள் காலை, 7:00 மணி முதல் சக்தி முனியப்பனுக்கு பல்வேறு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து, முனியப்பனுக்கு பொங்கல் வைத்து, ஆடு, கோழி மற்றும் பன்றி பலியிட்டு முப்பூஜை நடத்தினர். பூஜைகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி