உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காரில் கஞ்சா வைத்திருந்த மாணவி உட்பட 5 பேர் கைது

காரில் கஞ்சா வைத்திருந்த மாணவி உட்பட 5 பேர் கைது

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஹிமகிரி லேஅவுட் அருகே, சாலையோரம் நேற்று முன்தினம் மாலை, ஹூண்டாய் கார் நின்றிருந்தது. அவ்வழியாக ரோந்து சென்ற நல்லுார் போலீசார், சந்தேகத்தின் பேரில், காரில் சோதனை செய்தபோது, 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது.இதனால், காரில் இருந்த பெங்களூரு ஜெயின் பல்கலை.,யில் பி.காம்., 3ம் ஆண்டு படிக்கும், ஓசூர் அலசநத்தம் பிஸ்மில்லா நகரை சேர்ந்த ஆர்த்தி, 22, கே.சி.சி., நகர் கணேஷ் தெருவை சேர்ந்த தச்சுச்தொழிலாளி பிரவீன்குமார், 19, ஓசூர் பாகலுார் சாலை ஆசிரியர் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவா, 20, மூவேந்தர் நகரை சேர்ந்த அஜித், 21, ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த ஜீவா, 26, ஆகிய, 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கஞ்சாவை பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை