உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவி உட்பட 5 பேர் மாயம்

மாணவி உட்பட 5 பேர் மாயம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த நெடுசாலையை சேர்ந்தவர் உஷா, 20. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 2ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த பசுவராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.ஊத்தங்கரை அருகே, 35 வயது தாய், தன் 17வயது பிளஸ் 2 படிக்கும் மகளுடன் கடந்த, 31ல், வீட்டிலிருந்து மாயமானார். கணவர் புகார் படி, சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். கல்லாவி அடுத்த ஆனந்துாரை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 26. கடந்த, 31ல், வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர். மத்துார் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது கல்லுாரி மாணவி. கடந்த, 2ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர், மத்துார் போலீசில் அளித்த புகாரில், மத்துார் அடுத்த பிட்சனாம்பட்டியை சேர்ந்த விக்னேஷ், 23, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை