உலக நன்மை வேண்டி 508 திருவிளக்கு பூஜை
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட சேவா பாரதி தமிழ்நாடு சார்பில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், ஓசூர் தனியார் திருமண மண்டபத்தில், 508 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகவேல், தனியார் நிறுவன உரிமையாளர் கலாவதி ஆதி தலைமை வகித்தனர். செயலாளர் ரேணுகாதேவி, பி.எம்.சி., டெக் கல்லுாரி செயலாளர் மலர் முன்னிலை வகித்தனர். சிவன், பார்வதி சுவாமிக்கு, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத்தலைவர் பத்மா விஷ்ணுகுமார் சிறப்பு பூஜையை செய்தார். தொடர்ந்து, பெண்கள் பங்கேற்ற, 508 திருவிளக்கு பூஜை நடந்தது.அகில பாரதிய சன்யாசி சங்க பொருளாளர் சுவாமி சிவராமநந்தா, ஓசூர் குகை சுவாமி, சேலம் மண்டல பொறுப்பாளர் சுவாமி ஆதித்யானந்த சரஸ்வதி, சேலம் கைலாசநந்தபுரி சுவாமி, சுவாமி சந்தகாந்தன், சுவாமி ஞானபிரகாச நந்தா, தாரமங்கலம் சுவாமி பிரம்மஸ்வருபா நந்தபுரி, சுவாமி ராமானந்த மகராஜ் ஆகியோர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்ட சேவா பாரதி இணை செயலாளர் நிஷாந்தி, டாக்டர் அம்பிகா பாரி, துர்கா வாஹினி சேலம் கோட்ட செயலாளர் சுனிதாமதி, மாவட்ட அமைப்பாளர் நித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.