உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயம்

2 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயம்

கிருஷ்ணகிரி, ;பாரூர் அடுத்த பெண்டரஹள்ளியை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 19, நர்சிங் கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் புகார் படி, பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.ஊத்தங்கரை அடுத்த நல்லகவுண்டனுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 41, கூலித்தொழிலாளி. கடந்த, 6ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது கணவர் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.மத்துார் அடுத்த கன்னுகானுாரை சேர்ந்தவர் சுவேதா, 26, நிறை மாத கர்ப்பிணியான அவர் பிரவசத்திற்காக தாய் வீடு சென்றார். கடந்த, 3 மாதங்களுக்கு முன் அவருக்கு, இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. நேற்று முன்தினம் தன் குழந்தைகளுடன் வெளியே சென்றவர் மாயமானார். பெண்ணின் தாய், மத்துார் போலீசில் புகாரளித்தார். அதில், தர்மபுரி மாவட்டம், மாதேமங்கலத்தை சேர்ந்த குமரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.கல்லாவி அடுத்த திருவானப்பட்டியை சேர்ந்தவர், 17 வயது டிப்ளமோ படிக்கும் மாணவி. கடந்த, 7ல் வீட்டிலிருந்து மாயமானார். மாணவியின் பெற்றோர் புகார் படி, கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை